நாங்கள் 1000 பன்னீர்செல்வத்தை பார்த்தவர்கள். சசிகலா ஆவேச பேச்சு

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார்? என்பதில் குழப்ப நிலை கடந்த ஒரு வாரமாக நீடித்து வருகிறது. எம்.எல்.ஏக்களின் ஆதரவை வைத்துள்ள சசிகலாவை கவர்னர் இதுவரை அழைக்கவில்லை. மிரட்டி ராஜினாமா செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தும் ஓபிஎஸ் அவர்களுக்கும் கவர்னர் எந்தவித பதிலை கூறாமல் அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில் சற்று முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது: அதிமுகவை பிரித்தாள ஒருசிலர் நினைக்கிறார்கள். இன்றல்ல மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த அன்றே அதிமுகவை பிரிக்க நினைத்தார்கள். ஜெயலலிதா மறைந்த தினத்தன்று நீங்கள் தான் முதலமைச்சராக வேண்டும் என எல்லோரும் என்னை வலியுறுத்தினார்கள். ஆனால் நான் அன்று ஓபிஎஸ் தான் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்றும் ஏற்கனவே இருந்த அமைச்சரவையையே தொடரவும் சொன்னேன்
நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சர் ஆகியிருக்கலாம், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஜெயலலிதா இறந்த துக்கத்தில் முதலமைச்சராக எனக்கு விருப்பமில்லை. உண்மை நிலையை தொண்டர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் இப்போது விளக்கம் அளிக்கிறேன்
அதிமுகவில் பிளவு ஏற்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அதிமுகவிற்கு விசுவாசமாக பன்னீர்செல்வம் இல்லை, பிரித்து ஆள நினைக்கிறார். நாங்கள் இதுபோன்ற 1000 பன்னீர்செல்வத்தை பார்த்தவர்கள். எப்படி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பேசி வருகிறார்.

More News

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் மயக்கம். ஆம்புலன்ஸ் விரைந்தது

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆதரிப்பாக கூறப்படும் 100க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த ஒரு வாரமாக ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை மனிஷா யாதவ் திடீர் திருமணம்

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9, மற்றும் சுசீந்திரனின் 'ஆதலினால் காதல் செய்வீர்' போன்ற படங்களில் நடித்த நடிகை மனீஷா யாதவ் பெங்களூரை சேர்ந்த தொழிபதிபரை திருமணம் செய்து கொண்டார்

தலைமை செயலகத்தில் ஓபிஎஸ்- மு.க. ஸ்டாலின். பரபரப்பின் உச்சக்கட்டம்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இன்று தலைமை செயலகத்திற்கு வரவுள்ளதாக நேற்றே அறிவித்திருந்தார். ராஜினாமாவிற்கு பின்னர் அவர் முதல்முறையாக தலைமைச்செயலகம் வருவதால் இதுகுறித்து தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முக்கிய அதிகாரிகளுடன் சற்று முன்னர் ஆலோசனை நடத்தினார்...

நட்ராஜை முதல்வர் ஆக்குங்கள். தமிழக மக்களுக்கு முன்னாள் நீதிபதி கோரிக்கை

தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்றா ஓ.பன்னீர்செல்வ, சசிகலா ஆகிய இருவரும் தத்தமது பாணியில் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இருவருமே மக்களுக்கு ஆற்ற வேண்டிய தற்போதைய உடனடி பணிகள் குறித்து கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஒருவர் எம்.எல்.ஏக்களை எப்படி கவர்வது என்ற நடவடிக்கையிலும் இன்னொருவர் கையில் உள்ள எம்.எல்.ஏக

சிங்கத்தின் கர்ஜனைக்கு பின் 'போகன்' வசூல் எப்படி?

சூர்யாவின் 'சி3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த 2ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் 'போகன்' வசூல் எந்தவிதத்திலும் பாதிப்பு இன்றி வெற்றிகரமாக தொடர் வசூலை செய்து கொண்டிருக்கின்றது...