கொரோனாவிற்கு மருந்து..! பழைய முறையில் புது முயற்சி எடுக்கும் சீனா.
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸானது கிட்டத்தட்ட 180 நாடுகளில் உள்ள மக்களின் அன்றாட பணிகளை முடக்கியுள்ளது.பல நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றன. மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
சீனாவனது மனித இரத்த பிளாஸ்மாவை பிரித்தெடுத்து மருந்து கண்டுபிடிக்கும் முறையை தொடங்கியுள்ளது. இது ஒரு பழமையான முறையாகும். ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமான மனிதர்களின் இரத்த பிளாஸ்மாவில் வைரசை எதிர்க்கக் கூடிய ஆன்டிபாடிகள் காணப்படும். அதைக் கொண்டு மருந்தினை தயாரிக்கலாம். இது வெற்றி தரக்கூடிய ஒரு வழிதான்.
அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்களும் இதே முறையை பின்பற்ற அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்தால் நமக்கு சீக்கிரம் கொரோனா வைரஸினை எதிர்க்கும் ஒரு மருந்து கிடைக்கும். ஆனால் இந்த ஆராய்ச்சியானது கொரோனா வைரஸினை எதிர்த்து செயல்படுமா என்பது ஆராய்ச்சி முடிவிலேயே தெரியும். ஏனென்றால் இது மனித குலத்திற்கு மிக புதுமையான ஒரு வைரஸ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout