எங்களால் இந்தியாவையே கூறுபோட்டு பிரிக்க முடியும்… கோபத்தில் கொந்தளிக்கும் சீனா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனா பல ஆண்டுகளாகவே ஹாங்காங், தைவான் போன்ற பகுதிகளை தனது அதிகாரத்தின்கீழ் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ், எல்லைச் சிக்கல் போன்ற விவகாரங்களில் சீனாவிற்கு எதிரி நாடுகளாக கருதப்படும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தைவானுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த நெருக்கம் சீனாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் இந்தியாவை எச்சரிக்கும் நோக்கோடு ஒரு கட்டுரையை வெளையிட்டு இருக்கிறது.
அந்தக் கட்டுரையில் இந்தியாவையே கூறுபோடும் உக்தி சீனாவிடம் இருக்கிறது என்பது போன்ற கருத்துகளை வெளியிட்டு இருக்கிறது. இந்தக் கருத்து தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்திய சீன எல்லைப் பகுதியில் இருக்கும் சிக்கல் முடிவுக்கு வராத நிலையில் மேலும் தைவான் விவகாரத்தில் இந்தியாமீது சீனா காட்டம் தெரிவிப்பதால் என்ன நடக்கும் என்பது போன்ற வாதங்கள் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன.
தைவானின் தேசிய தினத்தின்போது இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டார். இந்த விவகாரமும் சீன ஊடகங்களில் கடும் விவாதத்தை எழுப்பி இருந்தது. மேலும் தைவானின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தார். இந்தச் சம்பங்களால் சீனா கடும் அதிருப்தி அடைந்து இருக்கிறது. அந்த அதிருப்தி தற்போது கட்டுரையாக வெளியாகி இருக்கிறது.
குளோபல் டைம்ஸின் ஆசிரியர் ஒருவர் வடகிழக்கை இந்தியாவில் இருந்து பிரிக்க சீனா நடவடிக்கை எடுக்கும் என்று நேரடியாக அச்சுறுத்தி உள்ளார். மேலும் குளோபல் டைம்ஸ் ஆசிரியரான ஹு ஷிஜின் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் சமூக சக்திகள் தைவான் பிரச்சனையில் விளையாடுகின்றன. வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளை நாங்கள் ஆதரவு அளித்து, சிக்கிமை தனிமைப்படுத்த முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வழிகளில் நாம் பதிலடி கொடுக்க முடியும். இந்திய தேசியவாதிகள் தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களின் நாட்டை எளிதாக பிரிக்கலாம்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகமும் தைவானுடன் காட்டப்படும் நெருக்கத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்து உள்ளது. தைவானுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஒருங்கிணைந்த –சீன கொள்கை மீறப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இந்த விவகாரங்களைத் தொடர்ந்து குளோபல் டைம்ஸ் இந்தியாவில் உள்ள பாஜக நெருப்புடன் விளையாடுகிறது என எச்சரிக்கவும் செய்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments