இந்தியாவிற்கு எதிராகக் கூட்டணி அமைக்கும் சீனா!!! பயோ வெப்பன் தயாரிப்பதாகவும் பரபரப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய-சீன எல்லைப் பிரச்சனைக்கு இடையில் இந்தியாவிற்கு எதிராக கூட்டணி அமைக்க சீன முயற்சிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு பல நேரங்களில் உதவிப் புரியும் நாடாக சீனா இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக இருநாடுகளும் கைக்கோர்த்து பயோ வெப்பன் (உயிரி ஆயுதங்களை) தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் வுஹான் மாகாண வைரலாஜி தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து பரவியதுதான் கொரோனா வைரஸ் என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூறிவருகின்றன. இதுகுறித்து மேலும் வெளிப்படையான விசாரணை தேவை என்று உலகில் பெரும்பலான நாடுகள் உலகச் சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தி கிளாசன் என்றும் உளவியல் அமைப்பு கொரோனா வைரஸ் சீனாவின் வைரலாஜி நிறுவனத்தில் இருந்து வெளியானது என்பதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது. அக்கட்டுரையில் கொரோனா வைரஸ் விவகாரம் மட்டுமல்லாது இந்தியாவிற்கு எதிராக சீனா மேற்கொள்ளும் சில சதித் திட்டங்களைப் பற்றிய அதிர்ச்சித் தகவலும் வெளியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர்ந்து பயோ வெப்பன் போன்ற உயிரித் தொழில்நுட்ப ஆயுதங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சீனா பல ஆண்டுகளாகவே DNA குறித்த ஆய்வில் ஆர்வம் காட்டி வருகிறது. கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று காலத்தில் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் உயிரித் தொழில் நுட்பத்திற்கான ஆய்வுகளை இனிமேல் பாகிஸ்தானில் வைத்து மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என கிளாசன் உளவு அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாகத் தற்போது பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இந்த ஆய்வுகளை இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகள் வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நேரத்தில் சீனா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் சந்தேகத்தை வரவழைப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ரகசிய ஒப்பந்தத்தின்படி உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு அதை ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆராய்ச்சித் திட்டங்களை பாகிஸ்தானில் மேற்கொள்வதற்கு வசதியாக தற்போது பாகிஸ்தான் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வைரஸை குறித்து ஆய்வு செய்வது, ஆபத்தான மரபணுக்களை பயன்படுத்தி ஆய்வு செய்வது, மரபணு கழிவுகளின் திறன்களை மேம்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தானில் கிரிமியன் காங்கோ எனப்படும் ரத்தக் கசிவு ஏற்படுத்தும் வைரஸை குறித்து ஆய்வு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த வைரஸ் பரவினால் 25 விழுக்காடு உயிரிழப்பு ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout