கொரோனா நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சீனா!!! தக்கப் பதிலடி கொடுத்த இந்தியா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா கோரத் தாண்டவத்தில் இருந்து தற்போது சீனா மீண்டு வந்திருக்கிறது. பல நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்யாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்து தனது பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் உலகில் மற்ற நாடுகள் கடும் பொருளாதார சரிவினைச் சந்தித்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவினால் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு இன்னும் இயல்புநிலைக்கு திரும்பாமல் இருக்கிறது.
இந்நிலையில், பல நாடுகளில் சீனா அந்நிய நேரடி முதலீட்டின் பேரில் அதிக பங்குகளை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் ஹெச்டிஹெஃசியின் பங்குகளை கடந்த வாரத்தில் சீனாவின் மத்திய மக்கள் வங்கி வாங்கியிருக்கிறது. கொரோனா பாதிப்பினால் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் முடங்கியிருக்கும்போது நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து தற்போது இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. கடந்த சனிக்கிழமை இந்தியாவிற்கு அருகாமையில் உள்ள நாடுகள் இந்தியாவில் முதலீடுகளை வாங்கும்போது மத்திய அரசின் ஒப்புதலைக் கட்டாயம் பெற வேண்டும் எனத் தெரிவித்து இருக்கிறது.
இந்தத் திருத்தத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு அதற்கான விளக்கத்தையும் வெளியிட்டு இருக்கிறது. “அந்நிய நேரடி முதலீட்டின் எந்த விதிகளையும் இந்தியா மாற்றவில்லை. கொரோனா பாதிப்பு நேரத்தில் அண்டை நாடுகளின் முதலீடுகளை அனுமதிப்பதற்கு முன்பு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது குறித்து மட்டுமே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இது சிறிய நடைமுறை மாற்றம் மட்டுமே. பெரிய அளவில் விதிகளை மாற்றவில்லை” என விளக்கம் அளித்து இந்த விஷயத்தை இந்திய அரசு சாதுர்யமாக சமாளித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments