கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பாதிக்கப் பட்டவரிகளின் பிளாஸ்மாக்கள் சேகரிப்பு – புது உக்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மாவை சேகரிக்கும் முயற்சியில் தற்போது சீனா ஈடுபட்டுள்ளது. கடுமையான வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்கள் தங்களது உடலில் உள்ள பிளாஸ்மாக்களை தானம் செய்யுமாறு அந்நாட்டு சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நோயில் இருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்கள் சிறந்த ஆண்டிபயாடிக்குகளாக (Antibiotic) பயன்படுகின்றன. எனவே, China National Biotec Group Co என்ற நிறுவனம் நோயாளிகளிடம் இருந்து ப்ளாஸ்மாக்களை சேகரிக்கும் முயற்சியில் தற்போது மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இதற்கான அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டது. கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து மீண்டவர்கள் தங்களது ப்ளாஸ்மாக்களை தானம் செய்யுமாறு அதில் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு மருத்துவத் துறையினரிடம் பெரும் பரபரப்பை தூண்டியுள்ளது எனலாம். கடந்த பிப்ரவரி 8 முதல் பாதிக்கப் பட்ட 10 நோயாளிகளைக் குணப்படுத்தும் முயற்சியில் பிளாஸ்மாக்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தச் சிகிச்சை முறையில் பாதிக்கப் பட்டவர்கள் நன்கு தேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பிளாஸ்மாக்களை கொண்டு சிகிச்சை மேற்கொள்வதால் முன்பை விட வேகமாக உடல் நிலை தேறி வருகிறது என்றும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பிளாஸ்மாக்களை பயன்படுத்தும் போது இரத்தத்தில் மேம்பட்ட ஆக்ஸிஜன் அளவு கூடுகிறது என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கொரோனா நாவல் வைரஸ்க்கு எந்த ஒரு தடுப்பூசியோ அல்லது எந்த மருந்துகளோ இல்லாத ஒரு நிலையில் ப்ளாஸ்மாவை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது நல்ல ஒரு வழிமுறையாக கருதப் படுகிறது. இது இறப்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதற்கு உதவும். எனவே நோயில் இருந்து மீண்டவர்கள் தங்களது ப்ளாஸ்மாவை தானம் வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
சீனாவின் தேசிய சுகாதாரத் துறை தற்போது மோசமான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளில் ஒன்றாக ப்ளாஸ்மாவை இணைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. Gilead Sciences Inc’s, Remdesivir AbbVie Inc’S Kaletra போன்ற நிறுவனங்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சீன மூலிகை மருந்துகள் இவற்றிற்கு பயன்படுமா என்கிற ரீதியிலும் ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.
நாட்டின் பொருளாதார நிலைமையையே சீர்குலைத்துள்ள கொரோனா வைரஸ் நோயினால் சீனாவில் இது வரை 1692 பேர் இறந்துள்ளனர். சீனாவிற்கு வெளியே 4 பேரின் இறப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. சீனா முழுவதும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout