நிரூபிக்கப்படாத கொரோனா ஊசி… மக்களை கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்கிறதா சீனா???
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனா நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை மக்கள்மீது கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சீன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தாலும் இத்தகவலில் உண்மை இருப்பதாகச் சர்வதேச அளவில் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் சோதனையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதில் 3 கொரோனா தடுப்பூசிகள் தற்போது 3 ஆம் கட்டப் பரிசோதனையில் இருந்து வரும் நிலையில் சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசிக்காக நடைபெறும் போட்டியில் சீன வெற்றி பெற வேண்டும் என நினைப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்காக மக்களை கட்டாயப்படுத்தி அவர்கள் மீது தடுப்பூசி பரிசோதனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்காக சீனா தனது நிரூபிக்கப்படாத தடுப்பூசியை அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், தடுப்பூசி நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்பொருள் அங்காடி ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆபத்தான பகுதிகளில் பயணிக்கும் மக்களுக்கு செலுத்தத் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவசரகால பயன்பாட்டை மேற்கோளிட்டு தடுப்பூசிகள் இறுதியில் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை நிரூபிக்கும் என்று கூறி இன்னும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திட்டங்களை அதிகாரிகள் வகுத்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்நிலையில் நிறுவனங்கள் வழியாக அரசாங்கம் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளும்போது ஊழியர்கள் அதைத் தடுப்பது மிகவும் கடினம் என்று பலரும் கவலைத் தெரிவித்து உள்ளனர். தற்போதுவரை அரசுக்குச் சொந்தமான சினோபார்ம் மருந்து நிறுவனத்தின் வழியாக நூற்றுக்கணக்கான மக்கள் தடுப்பூசி பரிசோதனையை செய்து கொண்டதாகவும் கருத்துக் கூறப்படுகிறது. சினோவாக் நிறுவனம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தை சார்ந்த 3 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அரசு அதிகாரிகள், அரசு நிறுவன ஊழியர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் இந்தப் பரிசோதனைக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் இந்தச் சோதனை குறித்த தகவல்களை வெளியே தெரிவிக்கக் கூடாது என ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீன அரசு, உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் படியே பரிசோதனைகள் நடைபெறுகிறது என்று விளக்கம் அளித்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout