அதிபரை கோமாளி எனக் சொன்னவருக்கு நேர்ந்த கதி… கருத்துச் சுதந்திரம் காற்றில் பறந்த சம்பவம்!!!
- IndiaGlitz, [Tuesday,September 22 2020]
சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை கோமாளி என விமர்சித்த அந்நாட்டு தொழிலதிபர் ஒருவருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ரென் ஷிகியாங்கிற்கு எனப்படும் அத்தொழிலதிபர் மீது மேலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, லஞ்சம் வாங்கியது, ஊழல் வழக்கு என பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 620,000 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீன அதிபர் கொரோனா விஷயத்தில் கோமாளித்தனமாக நடந்து கொண்டார் என்று ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுதியிருந்தார் ரென் ஷிகியாங்க். அதனால் கடந்த மார்ச் மாதம் முதல் காணாமல் ஆக்கப்பட்டார். தற்போது லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தானே ஒப்புக் கொண்டுள்ளார் எனக் கூறி 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
69 வயதாகும் ரென் ஷியாங் முன்னாள் அரசு அதிகாரியாக இருந்தவர். மேலும் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்வட்ட உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அவர் பதவியில் இருந்தபோது 7.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான விசாரணை எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப் படவில்லை. ஆனால் ரென் ஷியாங் தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று மட்டும் பொதுவெளியில் கூறப்படுகிறது.
இத்தனை ஆத்திரம் ஏற்படுவதற்கு அப்படி என்ன சொன்னார் தெரியுமா ரென் ஷியாங், “இந்த தொற்றுநோய் காலத்தில் கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். மேலும அதிபரைச் சுட்டிக்காட்டி, அங்கு நிற்பது தன் புதிய ஆடைகளை காட்டும் ஒரு அரசாளர் அல்ல, அரசராக இருந்தாலும் உடைகள் பறிக்கப்பட்ட ஒரு கோமாளி அவர் என விமர்த்து இருந்தார். அவ்வளவுதான், 18 ஆண்டு சிறை தண்டனை… மற்றும் 62 மில்லியன் டாலர் அபராதம்…