மீண்டும் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் '2.0'
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி நான்கே நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்திற்குள் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.600 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் சீன மொழி டப்பிங் பணிகள் நடந்து வருவதாகவும், சீன மொழியிலும், ஆங்கில சப்டைட்டிலுடன் சீனாவில் இந்த படம் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனா முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் 56 ஆயிரம் ஸ்க்ரீன்களில் வெளியாகவுள்ளதாகவும் இதில் 46 ஆயிரம் ஸ்க்ரீன்கள் 3Dயில் வெளியாகவுள்ளதாகவும் லைகா அறிவித்துள்ளது. இந்த படத்தின் சீன வசூலையும் சேர்த்தால் இந்திய திரையுலகில் வசூலில் புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
The Next Major Milestone for Team #2Point0 ➡️ MEGA Release In CHINA.. #2Point0InChina #2Point0MegaBlockbuster ?? @rajinikanth @akshaykumar @shankarshanmugh @arrahman @iamAmyJackson pic.twitter.com/RyWsNh5sUZ
— Lyca Productions (@LycaProductions) December 4, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com