இந்தியாவுக்கு 650,000 கொரோனா மருத்துவக் கருவிகளை அனுப்பி வைத்துள்ளது சீனா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப்போராட 650,000 கொரோனா மருத்துவக் கருவிகளை சீனா இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 15 நாள்களுக்குள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சோதனை கருவிகளை இந்தியா சீனாவிடம் இருந்து வாங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை விக்ரம்மிஸ்ரி தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
ரேபிட் ஆண்டிபயாடி, கொரோனா வைரஸில் இருந்து RNA வைப் பிரித்தெரிக்கும் கருவிகள் உள்ளிட்ட 650,000 கருவிகள் Guangzhou விமான நிலையத்தில் இருந்து இன்று இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. சீனா மூன்று மாதங்களுக்கு பின்பு தனது மருந்து தொழில் நிறுவனங்கள் முதல் அனைத்து தொழில் உற்பத்தியையும் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் வென்டிலேட்டர்கள் உட்பட அனைத்து மருத்துவ உபகரணங்களையும் சீனா உலக நாடுகளுக்கு விற்பனை செய்துவருகிறது. இதற்கு முன்னதாகவும் அனைத்து மருந்து தொழில் உற்பத்திக்கான மூலப்பொருட்களையும் இந்தியா சீனாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்துவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு குறைவாக செய்யப்படுகிறது எனக் குற்றம்சாட்டப்பட்டு வரும்நிலையில் கொரோனா மருத்துவப் பரிசோதனை கருவிகளை இந்தியா சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்திருக்கிறது.
#IndiaFightsCoronavirus A total of 650,000 kits, including Rapid Antibody Tests and RNA Extraction Kits have been despatched early today from Guangzhou Airport to #India | #2019nCoV #StayHomeSaveLives @MEAIndia @HarshShringla @DrSJaishankar
— Vikram Misri (@VikramMisri) April 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout