கொரோனாவை கட்டுப்படுத்தும் ஸ்பிரே!!! அசத்தும் புதிய கண்டுபிடிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையிலான களிம்பு ஒன்றை முன்னதாக அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி இருந்தனர். அந்த மருந்துக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையமும் அனுமதி அளித்தது. அதனால் மக்களின் பொது பயன்பாட்டிற்கும் அக்களிம்பு மருந்து கொண்டு வரப்பட்டது. தற்போது அதைப்போலவே சீனாவில் ஒருபுது கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் மையப்புள்ளியான மூக்கில், ஸ்பிரே மூலமாகத் தடுப்பு மருந்தைச் செலுத்தி அதன்மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சீனாவின் ஹாங்காங் பல்கலைக் கழகம், ஜியாமென் பல்கலைக் கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஸ்பிரே தடுப்பு மருந்து தனது முதல்கட்ட ஆய்வை தொடங்க இருக்கிறது. இதற்கு அந்நாட்டு தேசிய தடுப்பு மருந்து கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூக்கில் பரவும் கொரோனா வைரஸை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே உடலில் பரவவிடாமல் தடுக்கும் இந்தத் தடுப்பு மருந்து கொரோனா விஷயத்தில் பெரும் நம்பிக்கையாக இருக்கும் எனவும் அதன் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வருகிற நவம்பர் மாதத்தில் உலகிலேயே முதல்முறையாக கொரோனாவிற்கு மூக்கில் ஸ்பிரேவை அடிக்கும் தடுப்பு மருந்து பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முதற்கட்டமாக அந்நாட்டில் 100 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த ஸ்பிரே மருந்து செலுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் விளைவுகள் ஆராயப்பட்டு பின்னர் தடுப்பு மருந்தின் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒட்டுமொத்த உலக மக்களின் நம்பிக்கையாக இருக்கும்போது கொரோனவைக் கட்டுப்படுத்தும் இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகின்றனர். காரணம் இதுபோன்ற கண்டுபிடிப்புகளால் கொரோனா வைரஸ் பரவலை நேரடியாக ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout