மாயமான விமானம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிலி நாட்டின் ராணுவ வீமானம் அன்டார்டிகாவில் உள்ள அந்நாட்டுத் தளத்துக்குச் செல்லும் வழியில் திடீரென மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிலி நாட்டு ராணுவம் மாயமான விமானம் திங்கட்கிழமை மாலை அன்டார்டிகா நோக்கி சென்றுகொண்டிருந்தப்போது, விமானத்தின் ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.அந்த விமானத்தில் 17 விமானப் பணியாளர்கள் குழு மற்றும் 21 பயணிகள் உட்பட மொத்தம் 38 பேர் பயணித்தனர் எனவும் விமானத்தைத் தேடும் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டுவிட்டது எனவும் ராணுவம் தெரிவித்திருக்கிறது.
காணாமல்போன விமானம் சிலியின் தென்பகுதியில் தலைநகர் சாண்டியாகோவிலிந்து சுமார் 3000 கி.மீ. தொலைவில் உள்ள புன்டா அரினஸ் நகரிலிருந்து புறப்பட்டது. அந்த நாட்டு நேரப்படி மாலை 4.55 மணி அளவில் கிளம்பிய இந்த விமானம் 6.13 மணி அளவில் தொடர்பை இழந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments