கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் 10 வயதுக்கும் கீழான குழந்தைகள்!!! பாகிஸ்தானில் புது நெருக்கடி!!!

  • IndiaGlitz, [Friday,May 29 2020]

 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 10 வயதுக்கும் குறைவான 930 குழந்தைகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிந்து மாகாணத்தில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அதில் 930 பேர் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகள் என்பதுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குக் கொரோனா நோய்த்தொற்று ஏற்படும்போது அவர்கள் தீவிரமான நோயால் பாதிக்கப் படுவார்கள் என்ற எச்சரிக்கையை உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சிந்து மாகாணத்தில் மட்டும் 930 குழந்தைகள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் கடும் நெருக்கடியான சூழலில் வாழக் கூடியவர்கள் என்றும் பெரியவர்களிடம் இருந்து நோய்த்தொற்று இவர்களைத் தாக்கி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் அந்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. தற்போது பொருளாதாரக் காரணங்களுக்காக ஊரடங்கில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. வாரத்தின் 5 நாட்களுக்கு பகலில் இயல்பாக கடைகள் திறந்து வைக்கப்படுகின்றன. இந்நிலையில் 900 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப் பட்டதால் பரபரப்பு உருவாகி இருக்கிறது.