மொபைல் போனால் குழந்தைக்கு கண் பார்வையைத் தவிர இத்தனை சிக்கலா? விளக்கம் அளிக்கும் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,January 18 2021]

பொதுவா கண் பார்வை பாதிக்கப்படும் என்ற நோக்கத்தில்தான் நாம் மொபைல் போன்களை குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம் எனச் சொல்கிறோம். ஆனால் இதில் கண் பார்வையைத் தவிர பல சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவிக்கின்றனர். இது குறித்து நிபுணர் சக்தி பிரியா அளிக்கும் விளக்கம் இதில் வீடியோவாக இணைக்கப்பட்டு உள்ளது.

மொபைல் போனை குறைந்தது 2 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என சக்தி பிரியா கூறுகிறார். ஒருவேளை 4 வயதுக்கு மிகையான குழந்தைகள் என்றால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு அதிக அளவாக 2 மணி நேரம் அனுமதிக்கலாம். அதற்கு மேல் அனுமதிக்கக்கூடாது என்றே சக்திப் பிரியா தெரிவிக்கிறார். காரணம் பொதுவாக குழந்தைகள் ஒரு மொழியை 5 வயதிற்கு உட்பட்டே கற்றுக் கொள்கின்றனர். இப்படிதான் ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய தாய் மொழியை முழுமையாகத் தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறது.

இந்நேரத்தில் ஒரு குழந்தைக்கு மொபைல் போன் கிடைத்தால் அந்தக் குழந்தை மொபைல் போனில் வரும் பல மொழிகளையும் கேட்க நேரிடலாம். இதனால் தாய்மொழியை கற்றுக் கொள்ளும் திறன் பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்கும் பொருட்டு கண்டிப்பாக குழந்தைகளுக்கு மொபைல் போனை கொடுக்கக் கூடாது. ஒரு வேளை மொபைல் போனை பார்த்து பழகிவிட்ட குழந்தையாக இருந்தால் அவர்களை வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு விளையாடுவது, குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பது என வேறு வழிகளில் அந்தக் குழந்தையின் கவனத்தை மாற்ற வேண்டும்.

ஒருவேளை பெற்றோருக்கே தெரியாமல் குழந்தை மொபைல் போனை எடுத்து பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதைப் பார்த்தவுடன் கண்டிப்புக் காட்டக்கூடாது என்கிறார் சக்திபிரியா. அவர்களை சமாதானப்படுத்தி ரொம்ப நேரம் ஆகிவிட்டது. நாம் வேறு வேலை செய்யலாமா? எனக் கவனத்தை திசைத்திருப்ப வேண்டும் என்கிறார். மேலும் குழந்தைகளை சுவற்றில் கிறுக்குவது அதேபோல மண்ணில் விளையாட விடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். முக்கியமாக விளையாட வைக்க வேண்டும். இவையெல்லாம் குழந்தையின் திறனை வளர்த்துக் கொள்ள உதவும் என்கிறார்.

இத்தகைய செயல்களை செய்யும்போது தானாக மொபைல் போன் மீதான ஆர்வம் குறைந்து விடும் எனகிறார். ஒருவேளை குடும்பத்தில் உள்ள பெரியவர்களே மொபைல் போனிற்கு அடிமையாக இருந்தால் அவர்கள் முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுகிறார் சக்திபிரியா. இதனால் குழந்தை இருக்கும்போது கண்டிப்பாக மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அல்லது இணைய வசதியை துண்டித்து விட வேண்டும் எனக் கூறுகிறார்.

மொபைல் போன் என்பது கண் பார்வையை மட்டும் அல்ல, ஒரு குழந்தையின் மொழித் திறன், செயல் திறன், கவனம் எல்லாவற்றிலும் தலையீடு செய்கிறது. எனவே குழந்தையின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு மொபைல் போனை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். குழந்தையின் செயல் திறன் என்பது விளையாட்டிலும் மற்றவர்களோடு நேரத்தை செலவழிப்பதிலும் இருக்கிறது. இந்தச் செயல்பாட்டை மொபைல் போன் தடுத்து விடுகிறது. எனவே குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றிர் சக்தி பிரியா.

More News

மத்திய மாநில அரசு விருதுகளை திருப்பி தருகிறேனா? இளையராஜா விளக்கம்!

கடந்த சில மாதங்களாக இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ இடையே பிரச்சனை நீண்டு வந்த நிலையில் இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அநீதி இழைத்ததாகவும்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரி டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

குழந்தைகள் உண்ணும் ஐஸ்கிரீமிலும் கொரோனா வைரஸா? பதைக்க வைக்கும் தகவல்!

கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்புகளில் தங்கி இருக்கும் என்ற தகவலை கடந்த ஜனவரி மாதத்திலேயே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர்.

கவர்ச்சி உடையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஷிவானி: ஆரிக்கு அளித்த மெசேஜ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன்.

என் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பதும் இருவருக்குமே வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே