தாய் இறந்தது கூட தெரியாமல் எழுப்பும் பச்சிளங்குழந்தை: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாநிலம் விட்டு மாநிலத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் நடந்தே சென்றனர். இவர்களில் சிலர் செல்லும் வழியிலேயே பசி மயக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர் என்பது கொடுமையான நிகழ்வாகும்
இந்த நிலையில் குஜராத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபூருக்கு தனது 2 வயது குழந்தையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் ரயிலில் புறப்பட்டுள்ளார். அவர் சென்ற ரயில் முசாபூர் ரயில் நிலையத்தை அடையும் முன்னரே அந்த பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டது. பசி மற்றும் வெப்பம் தாங்காமல் அந்த பெண் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது
இதனை அடுத்து முசாபர் ரயில் நிலையத்தில் அந்த பெண்ணின் உடல் போர்வையால் மூடப்பட்டு ஆம்புலன்ஸ் வரும் வரை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய பச்சிளம் குழந்தையை அவர் மேல் மூடப்பட்டிருந்த போர்வையை எடுத்து அவரை எழுப்ப முயற்சித்த பரிதாபமான காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடன் விளையாடிக்கொண்டும் எழுப்ப முயன்று கொண்டும் இருந்த அந்த குழந்தையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
Ayyo :( pic.twitter.com/pQDviEsvs2
— Sonia Arunkumar (@rajakumaari) May 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments