வெளியே போனால் அரசாங்கம் என்னை எடுத்துக்கும்: ஒரு சிறுவனின் க்யூட் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,April 14 2020]

நாடு முழுவதும் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனை அடுத்து மேலும் 18 நாட்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஊரடங்கு காலத்தில் யாரும் வீட்டைவிட்டு தேவையில்லாமல் வெளியே போகக்கூடாது என்றும் பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தாய் தனது மகனிடம் வீட்டை விட்டு வெளியே போகலாமா? தயாரா? என கேட்க அந்த சிறுவன் ’வெளியே போகக் கூடாது என்றும், மோடி அங்கிள் வெளியே போகக்கூடாது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி ‘வெளியே போனால் என்னை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்’ என்றும் குழந்தைத்தனமாக கூறியிருப்பது மிகவும் க்யூட்டாக இருப்பதாக அனுபம்கெர் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு உதயநிதி செய்த நிதியுதவி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்திருந்த நிலையில் தற்போது மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுவும் கடந்து போகும்: ரஜினியின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொரோனா வைரஸ் பீதியையும் தாண்டி தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் தமிழ்ப்புத்தாண்டு

மாண்ட மருத்துவருக்கு சிதை நெருப்பு தர மனமில்லையா? சீனுராமசாமி ஆவேச கவிதை

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர் ஒருவரை தகனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என நேற்று முதல் அம்பத்தூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அம்பேத்கர் பிறந்த நாளையும் கொண்டாடி வரும் நிலையில் நடிகரும்

சென்னை ராயபுரத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: மற்ற இடங்களில் எப்படி?

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகவும், இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1173