ஆபாச படத்துக்காக தனி மெசஞ்சர் குரூப்: சிக்கும் சென்னையை சேர்ந்தவர்கள்

  • IndiaGlitz, [Thursday,December 12 2019]

ஆபாச படம் பார்த்தவர்கள் மற்றும் பதிவேற்றியவர்கள் விவகாரத்தில் இன்று திருச்சியைச் சேர்ந்த அல்போன்ஸ் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவரை அடுத்து இன்னும் ஒரு சிலர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

ஐடிஐ படித்துவிட்டு ஏசி மெக்கானிக் ஆக பணியாற்றி வரும் அல்போன்ஸ் ராஜிடம் இன்று போலீசார் நடத்திய விசாரணையில் ’நிலவன், நிலவன் நிலவன், ஆதவன் என்ற மூன்று பெயர்களில் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டம் உள்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்

இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அல்போன்ஸ்ராஜ் பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாச படங்களை பார்ப்பதற்கு என்றே தனி குரூப் ஆரம்பித்து அதில் குழந்தைகள் ஆபாச வீடியோவை பகிர்ந்து உள்ளதாகவும் அவருடைய மெசஞ்சர் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் அதில் பெரும்பாலும் சென்னையைச் வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த மெசஞ்சரில் அல்போன்ஸ் ராய்ராஜ் இன்னும் பத்து பேர்களுக்கு மேல் குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்து இருப்பதால் அவர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆபாச பட விவகாரத்தில் முதல் கைது நடவடிக்கை நடந்துள்ள நிலையில் இன்னும் அடுத்தடுத்து கைது நடவடிக்கை நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது