குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம்: வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள 500 பேர் சிக்குகிறார்களா?
- IndiaGlitz, [Thursday,December 12 2019]
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குழந்தைகள் ஆபாச திரைப்படங்களை அதிகம் பார்ப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து தமிழகத்தில் ஆபாச படம் பார்த்தவர்கள் பட்டியல் ஒன்று தற்போது காவல்துறையினர்களிடம் உள்ளது
இந்த பட்டியலின்படி மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று காலை திருச்சியைச் சேர்ந்த அல்போன்ஸ்ராஜ் என்பவரை விசாரணை செய்த காவல்துறை அவர் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தெரிய வந்துள்ளதை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அல்போன்ஸ் ராஜ் வாட்ஸ்அப் குரூப்பில் 500 பேர்கள் இருப்பதாகவும் அந்த 500 பேர்களுக்கும் அவர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து உள்ளதாகவும், அந்த 500 பேர்களும், தங்களுடைய நண்பர்களுக்கு அந்த வீடியோக்களை பகிர்ந்து இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து அல்போன்ஸ்ராஜ் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்த 500 பேரிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாகவும் இந்த விசாரணையில் 500 பேர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து இருந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது