வளைவில் திரும்பும்போது காரில் இருந்து கீழே விழுந்த குழந்தை: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று வளைவில் திரும்பும் போது திடீரென காரில் இருந்த குழந்தை ஒன்று கீழே விழுந்த சிசிடிவி வீடியோ காட்சியில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் என்ற பகுதியில் சமீபத்தில் சாலையில் உள்ள ஒரு வளைவில் வேகமாக ஒரு கார் திரும்பியது. அப்போது அந்த காரின் கதவு எதிர்பாராதவிதமாக திறந்து அதில் உட்கார்ந்திருந்த குழந்தை ஒன்று திடீரென சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் பின்னால் வந்த வாகனமும் எதிரே வந்த வாகனமும் சுதாரித்து உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் குழந்தை எந்தவித ஆபத்தும் இன்றி உயிர் பிழைத்தது.
அதன்பின்னர் காரிலிருந்து குழந்தை விழுந்ததை அறிந்ததும் அலறி அடித்தபடி காரிலிருந்து ஒருவர் ஓடிவந்து குழந்தையை தூக்கி சென்ற காட்சியும் இந்த சிசிடிவி வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
குழந்தைகளை காரில் அழைத்துச் செல்லும்போது கதவுகள் சரியாக மூடப்பட்டு இருக்கிறதா என்பதை பெரியவர்கள் கவனிக்க வேண்டும் என்றும் பெரியவர்களின் அஜாக்கிரதையலதான் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாகவும் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com