திரும்பும் போது திறந்த கதவு.. காரில் இருந்து கீழே விழுந்த குழந்தை..! அதிர்ச்சி வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
`காரில் பயணம் செய்யும்போது குழந்தைகள் மீது கவனம் இருக்க வேண்டும்’ என ஐபிஎஸ் அதிகாரியான பங்கஜ், தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காரில் இருந்து குழந்தை ஒன்று தவறிவிழும் வீடியோ அது. இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் கேரளா சாலையில் வேகமாக பயணிக்கும் காரிலிருந்து பின்பக்க கதவு திறந்த நிலையில் திருப்பத்தின் போது குழந்தையானது கீழே விழுகிறது. பின்னால் வந்த டெம்போ வாகன ஓட்டுநர் குழந்தையை கவனித்ததால் வாகனத்தை நிறுத்திவிட்டார். எதிரில் வந்த பேருந்தும் நிறுத்தியதால் பெரிய விபத்தில்லாமல் குழந்தை காப்பற்றப்பட்டது.
``காரில் பயணிக்கும்போது குழந்தையின் இருக்கைகள் மற்றும் காரின் லாக்குகள் மீது கவனம் இருக்க வேண்டும். எல்லா கதவுகளும் மூடப்பட்டிருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். எல்லா குழந்தைகளும் இதைப்போல் அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டார்கள்” என பங்கஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரள வனப்பகுதியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜீப்பில் பயணம் செய்யும்போது குழந்தை ஒன்று தவறி விழுந்தது. குழந்தை விழுந்ததுகூட தெரியாமல் அந்த வாகனம் சென்றுவிட்டது. வனப்பகுதிக்கு அருகில் சுங்கச்சாவடி இருந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பியது.
Child lock and child seats are very important when travelling with childrens. Check all doors are closed properly, and child lock is on. Always make sit children in a child restraint seat. All kids wont be as lucky as this one. #Staysafe #Roadsafety pic.twitter.com/qfnf1rMrox
— Pankaj Nain IPS (@ipspankajnain) January 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout