என்னுடைய சப்போர்ட் சூர்யா அங்கிளுக்கு: வைரலாகும் குழந்தை நட்சத்திரத்தின் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்து, தயாரித்த ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஒட்டுமொத்த திரை உலகம் மற்றும் ரசிகர்கள் பெரும் வரவேற்பு தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வன்னியர் சங்கம் உள்பட ஒரு சில அமைப்புகள் மட்டும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சூர்யாவுக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தாலும் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு ஆதரவாக இருப்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் ராஜாக்கண்ணு மற்றும் செங்கனி மகளாக அல்லி என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜோஸிகா, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ’ஜெய்பீம்’ திரைப்படம் மலைவாழ் மக்களின் நன்மைக்காக எடுக்கப்பட்ட படம் என்றும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் சூர்யா அங்கிளின் நோக்கம் என்றும் சூர்யா அவர்கள் நிறைய பேரை படிக்க வைத்து வருகிறார் என்றும் யாரும் அவரை காயப்படுத்தும்படி பேசாதீர்கள் என்று எல்லோரும் அவருக்கு ஆதரவு தாருங்கள் என்றும் என்னுடைய ஆதரவும் சூர்யா அங்கிளுக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் ஜோஸிகாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
#JaiBhim #Alli Supports Surya #WeStandWithSuriya pic.twitter.com/N8DOVIzVLo
— Cinema Updates (@mastervijay2020) November 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com