close
Choose your channels

டெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்

Saturday, October 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக குழந்தைகளும் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து ஜூனியர் பாலகிருஷ்ணா என புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா நேற்று டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார். கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சாய்கிருஷ்ணா நேற்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.

கோகுல் சாய்கிருஷ்ணாவின் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் பாலகிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் கோகுல் சாய்கிருஷ்ணாவின் எதிர்பாராத மரணம் குறித்த தகவல் தனது இதயத்தை நொறுக்கிவிட்டதாகவும், தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினர்களுக்கு தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment