இவரல்லவா தலைமை செயலாளர்: இறையன்பு ஐஏஎஸ் அவர்களுக்கு குவியும் பாராட்டு!

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

சமீபத்தில் தமிழக தலைமைச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சற்றுமுன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தான் எழுதிய புத்தகங்களை வாங்க வற்புறுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவித்துள்ளதாகவும், தலைமைச் செயலாளர் பதவியில் நான் இருக்கும் வரை நான் எழுதிய புத்தகத்தை எனக்கு யாரும் பரிசளிக்க கூடாது என்றும் அறிவித்து உள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: நான்‌ பணி நேரம்‌ முடிந்த பின்பும்‌, விடுமுறை நாட்களிலும்‌ எனக்குத்‌ தெரிந்த தகவல்களை வைத்தும்‌, என்‌ அனுபவங்களைத்‌ தொடுத்தும்‌ சில நூல்களை எழுதி வந்தேன்‌. அவற்றில்‌ உள்ள பொருண்மை, கடற்கரையில்‌ கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக்‌ கருதி சேகரிக்கும்‌ சிறுவனின்‌ உற்சாகத்துடன்‌ எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின்‌ காரணமாக பள்ளிக்‌ கல்வித்துறைக்கு நான்‌ ஒரு மடல்‌ எழுதியுள்ளேன்‌. நான்‌ எழுதியுள்ள நூல்களை எக்காரணம்‌ கொண்டும்‌ எந்த அழுத்தம்‌ வரப்பெற்றாலும்‌, தலைமைச்‌ செயலராகப்‌ பணியாற்றும்‌ வரை எந்தத்‌ திட்டத்தின்‌ கீழும்‌ வாங்கக்‌ கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என்‌ பணியின்‌ காரணமாக அது. திணிக்கப்பட்டிருப்பதாகத்‌ தோன்றி களங்கம்‌ விளைவிக்கும்‌ என்பதால்தான்‌ இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன்‌. எந்த வகையிலும்‌, என்‌ பெயரோ, பதவியோ தவறாகப்‌ பயன்படுத்தப்படக்‌ கூடாது என்பதே நோக்கம்‌.

அரசு விழாக்களில்‌ பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள்‌ வழங்கினால்‌ நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம்‌ ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில்‌ அரசு அலுவலர்கள்‌ யாரும்‌ என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில்‌ விநியோகிக்க வேண்டாம்‌ என்று அன்புடன்‌ விண்ணப்பம்‌ வைக்கிறேன்‌. இவ்வேண்டுகோள்‌ மீறப்பட்டால்‌ அரசு செலவாக இருந்தால்‌ தொடர்புடைய அதிகாரியிடம்‌ அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில்‌ செலுத்தப்படும்‌. சொந்த செலவு செய்வதையும்‌ தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம்‌ கொண்டும்‌ ஏற்படுத்த வேண்டாம்‌ என அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் இந்த அறிக்கையைப் பார்த்த பொதுமக்கள் இவரல்லவா தலைமைச் செயலாளர் என்று போற்றி பாராட்டி வருகின்றனர்.

More News

100 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை: ரஜினி பட நடிகையின் உதவி!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த நடிகை ஒருவர் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட  தற்காலிக மருத்துவமனை ஒன்றை கொரோனா நோயாளிகளுக்காக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தூணையே இழந்து விட்டேன்… கொரோனாவால் உயிரிழந்த தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஸ்பின் பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா.

16-வது தமிழக சட்டப்பேரவை...! அமைச்சர்கள் இன்று பதவியேற்பு...!

தமிழக முதல்வரான ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டசபை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

மருத்துவமனை செட்டை அப்படியே நன்கொடையாக கொடுத்த பிரபல நடிகரின் படக்குழு!

பிரபல நடிகர் ஒருவரின் படத்திற்காக மருத்துவமனையின் செட் ஒன்று போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட அந்த செட்டில் உள்ள பொருட்களை அப்படியே மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்து உள்ளது

கொரோனா பாதித்தவர்கள் நியூஸ் பார்க்க வேண்டாம்: கொரோனாவில் இருந்து மீண்ட இயக்குனரின் பதிவு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட 'அயலான்' பட இயக்குனர் ரவிகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக கொரோனா கால தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: