தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி… ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ் என்ட்ரி!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற பெயரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழக முதல்வருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாகக் கூடி வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி தான் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒவ்வொரு மேடையிலும் மக்களுக்கு பயன்படும் வகையில் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளை தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறார். இதனால் தமிழக முதல்வரின் தேர்தல் சுற்றுப் பயணத்தை மக்கள் ஆவலுடன் கவனிக்க தொடங்கி விட்டனர்.

அந்த வகையில் தற்போது திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் வீடு இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர்களுக்கு அரசாங்கமே நிலத்தை வாங்கி கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கும் என்ற உத்தரவாத்தை அளித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து திருப்பூரில் தமிழக முதல்வருக்கு பெருத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் தமிழக முதல்வர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அரசாங்க அதிகாரிகளும் மற்றும் அதிமுக தொண்டர்களும் திரளாகக் கூடி வரவேற்றனர்.