முதல்வர் காப்பீடு திட்டம்...! கோவையில் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் பயன்படும்...!
- IndiaGlitz, [Wednesday,May 12 2021]
கொரோனா சிகிச்சைக்காக தமிழக முதல்வரின் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ், கோவையில் உள்ள எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட கலெக்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கோவை தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சையளிக்க, மாவட்டத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பவர்களுக்கு, முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சையளிக்க தயாராக இருக்கும் தனியார் மருத்துவமனைகள்,
1. அபிநந்த் மருத்துவமனை
2. சத்தியா மெடிக்கல் சென்டர்
3.என்.ஜி.ஹாஸ்பிடல், சிங்காநல்லூர்
4. சிஎஸ்ஆர்.நர்ஸிங் ஹோம்
5. கொங்குநாடு மருத்துவமனை
6. கல்பனா மெடிக்கல் சென்டர், கவுண்டம்பாளையம்
7. பி.எம்.எஸ் மருத்துவமனை
8.ஸ்ரீ அபிராமி மருத்துவமனை
9. கே.ஜி.ஹாஸ்பிடல்
10.இந்துஸ்தான் ஹாஸ்பிடல், உடையாம்பாளையம் ரோடு
11.கற்பகம் ஹாஸ்பிடல், மண்டபம்
12.ஒன் கேர் மெடிக்கல் சென்டர்
13.ஜி.குப்புசாமி நாயுரு மெமோரியல் ஹாஸ்பிடம்
14.ஜெம் ஹாஸ்பிடல்
15.ஸ்ரீராமகிருஷ்ணா ஹாஸ்பிடல்
16.ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்
17.ஸ்ரீலட்சுமி ஹாஸ்பிடல்
18.என்.எம். ஹாஸ்பிடல்
19.கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிடல்
கோவிட் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவரின் பரிந்துரைகள் இல்லாமல், நேரடியாக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் தொகை எப்படி வழங்கப்படுகிறது...?
1.கொரோனா தொற்று மிதமாக உள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.5000 வீதம், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கப்படும்.
2. கொரோனா தீவிரமுள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 என, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்.
சிகிச்சைக்காக அதிகப்படியான தொகை தேவைப்பட்டால், முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ், காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளுக்கு தொகையை நேரடியாக வழங்கிவிடும்.
கொரோனா இலவச சிகிச்சை குறித்த தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 3993- என்பதில் தொடர்பு கொண்டு அறியலாம். கூடுதல் விவரங்களை www.cmchistn.com என்ற இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.