டபுள் மாஸ்க் போடுங்க… வைரலாகும் முதல்வரின் விழிப்புணர்வு வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தீவிரம் பெற்றுவரும் கொரோனாவிற்கு எதிராகப் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்நேரத்தில் மிகுந்த பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். முடிந்த வரை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படி தவிர்க்க முடியாத காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியே சென்றாலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடுத்து முகக்கவசம் மனிதர்களுக்கு உயிர்க்காக்கும் கவசமாக செயல்படுகிறது. எனவே முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது.
சிலர் முக்கவசம் அணியும்போது பாதி அளவு அணிகின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால் ஹெல்மெட்டை வாங்கி வண்டியில் மாட்டி வைத்து இருப்பது போல. எனவே முகக்கவசத்தை வாய், மூக்கு இரண்டும் மறையும்படி அணியே வேண்டும். மேலும் நெருக்கமாக உள்ள இடங்களுக்குச் செல்லும்போது இரண்டு மாஸ்க்குகளை சேர்த்து அணிவது நல்லது. பேருந்துகள், தொழிற்சாலைகள் வேலை செய்யும் இடம் என இதுபோன்ற இடங்களில் இரண்டு மாஸ்க் அணிவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இப்படி அணியும்போது முடிந்த வரை நோயில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் தடுப்பூசி என்பது உயிர் ஆயுதமாகச் செயல்படுகிறது.எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடும்போது சிலருக்கு காய்ச்சல் போன்ற பக்கவிளைவு ஏற்படலாம். ஆனால் ஒருநாளில் அது சரியாகிவிடும். எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இதைத்தவிர கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்படி மாஸ்க், கிருமிநாசினி, தடுப்பூசி விஷயத்தில் கவனம் செலுத்தினால் கொரோனாவில் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும். வருமுன் காப்போம். கெரோனா இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என முதல்வர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
முகக்கவசம் அணியுங்கள்!
— M.K.Stalin (@mkstalin) May 19, 2021
கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்!
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்!
நம்மையும் காத்து,
நாட்டு மக்களையும் காப்போம்! pic.twitter.com/bPcBrg1Q8E
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout