68 வயதிலும் அசராமல் வொர்க் அவுட் செய்யும் முதல்வர்… வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதில் இருந்தே கடுமையான வேலைப்பளுவை சந்தித்துவருகிறார். இப்படியான வேலைப்பளுவிற்கும் இடையிலும் அவர் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதாகத் தகவல் கூறப்படுகின்றன.
மேலும் வார இறுதி நாட்களில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவர் தனது பாதுகாப்பு அதிகாரிகளை கூட்டிக்கொண்டு சைக்கிளிங் சென்றுவிடுகிறார். இந்த சைக்கிளிங் பயணத்தின்போது அவர் சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பதும் அவ்வபோது பொதுமக்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் அவ்வபோது வைரலாகின்றன.
இதைத்தவிர உடற்பயிற்சி செய்வதற்காகவே தனது வீட்டில் உடற்பயிற்சி நிலையத்தை வைத்திருக்கும் மு.க.ஸ்டாலின் சிலநேரங்களில் சாலையில் நடைபயிற்சி செய்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்படி உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் கட்டுக்கோப்பு விஷயத்தில் அதிக அக்கறைக் கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது வொர்க் அவுட் செய்யும் ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் 68 வயதிலும் முதல்வர் எவ்வளவு அக்கறையோடு செயல்படுகிறார் என வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com