அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த பாஜக…கேரளாவில் மீண்டும் தொடரும் ஆட்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும் (எல்டிஎஃப்) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (யுடிஎஃப்) இடையில் கடும் போட்டி நிலவியது. அதோடு கேரளாவில் ஆட்சி அமைப்போம் என்ற வாக்குறுதியுடன் பாஜக தனித்துப் போட்டியிட்டது.
ஆனால் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக தான் போட்டியிட்ட 139 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து இருக்கிறது. அதோடு 71 தொகுதிகளில் வெற்றிப்பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றிப்பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் முதல்வர் பிணராயி விஜயன் மீண்டும் கேரள முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
மேலும் தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பிணராயி விஜயன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்நிலையில் பாஜக தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்து இருப்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
முன்னதாக பாஜக தலைவர்கள் கேரளாவில் ஆட்சி அமைக்கப் போவதாகத் தெரிவித்து இருந்தனர். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்ற நெமம் தொகுதியையும் தற்போது இழந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments