அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த பாஜக…கேரளாவில் மீண்டும் தொடரும் ஆட்சி!

  • IndiaGlitz, [Monday,May 03 2021]

கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும் (எல்டிஎஃப்) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (யுடிஎஃப்) இடையில் கடும் போட்டி நிலவியது. அதோடு கேரளாவில் ஆட்சி அமைப்போம் என்ற வாக்குறுதியுடன் பாஜக தனித்துப் போட்டியிட்டது.

ஆனால் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக தான் போட்டியிட்ட 139 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து இருக்கிறது. அதோடு 71 தொகுதிகளில் வெற்றிப்பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றிப்பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் முதல்வர் பிணராயி விஜயன் மீண்டும் கேரள முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

மேலும் தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பிணராயி விஜயன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்நிலையில் பாஜக தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்து இருப்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

முன்னதாக பாஜக தலைவர்கள் கேரளாவில் ஆட்சி அமைக்கப் போவதாகத் தெரிவித்து இருந்தனர். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்ற நெமம் தொகுதியையும் தற்போது இழந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இன்ஸ்டாகிராமில் பிகினி வீடியோவை வெளியிட்ட திருமணமான இளம் நடிகை!

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண்  18/9' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன்

தாங்கள் வைத்துள்ள நம்பிக்கை நிறைவேற்றப்படும்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்டாலின் நன்றி!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின்

வரும் 7 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.

கமல் தோல்வி குறித்து தனது பாணியில் டுவிட் போட்ட பார்த்திபன்!

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

குமரியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த்: குவியும் திரையுலகினர்களின் வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் காலியாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே