அக்கரையில் இருப்போரின் ஆதரவும் இபிஎஸ்க்கே… வேட்பாளர் தகுதியும் இவருக்கே… குதூகலிக்கும் தொண்டர்கள்!!!

தமிழகத்தில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் குறித்த சர்ச்சை சில தினங்களாக கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டமும் நடந்து முடிந்து முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கான அறிவிப்பு வரும் 7 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டது. இத்தனை பரபரப்புக்கும் காரணம் கட்சிக்குள் நிலவும் சில முரண்பாடுகளே என விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சிக்குள் முதல்வரின் பலம் மேலும் அதிகரித்து இருப்பதாகக் கணிக்கப் படுகிறது. தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்குமுன் ஜெயலலிதாவின் மறைவு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்து வந்தார்.

அதற்குப் பின்னர் திடீரென சில மாற்றங்கள் ஏற்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றார். இதனால் ஓபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் தனியாக பிரிந்து சென்று போராட்டம் நடத்தினார். அதன்பின்னர் அதிமுகவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் பெயரில் மீண்டும் கட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்தார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

முதல்வர் பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையே இதுகுறித்து பெரிய போரே நடந்து வருகிறது. அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். கட்சியின் போக்கை கவனித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவாக மாறி வருகின்றனர்.

இதனால் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அனைவரின் ஒருமித்த முடிவாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே தேர்ந்தெடுக்கப் படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.