மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்களைச் சூட்டி முதலமைச்சர் பெருமிதம்!!!
- IndiaGlitz, [Friday,July 31 2020]
சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள நவீன மெட்ரோ ரயில்சேவை நிலையங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயர்களை மாற்றி தமிழகத் தலைவர்களின் பெயர்களை சூட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தியாவில் பெரிய மெட்ரோ ரயில் நிலையமாக அறியப்படுகிற சென்னை மெட்ரோ சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர்மாற்றம் செய்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதன்படி, சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு “அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையம் “புரட்சி தலைவர் எம்ஜிஆர் நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு புறநகர் மெட்ரோ ரயில் நிலையம் “ஜெயலலிதா மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.