மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர்....! தடுப்பூசி என்னாச்சு...?
- IndiaGlitz, [Saturday,April 24 2021]
தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 10 ஆயிரத்தையும் கடந்து வருகிறது. 2-ஆம் கட்ட கொரோனா அலையானது வேகமாக பரவி வருவதால், மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகளும் அதிகமாகி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடக்கவேண்டுமென்றால், இன்னும் 20 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ரெம்டெசிவர் மருந்தை தயாரிக்கக் கூடிய மாநிலங்களில் இருந்து தடையில்லாமல் இந்த மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த வளாகத்தில், கொரோனா தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்பதால், அதை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட ண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அக்கடிதத்தில் இடம்பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து இன்று மதியம் சென்னைக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.