மோடி உழைப்பால் இந்தியா உயர்ந்துள்ளது… பிரதமர் கலந்து கொண்ட விழாவில் தமிழக முதல்வர் பேச்சு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, திமுக பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிவருகிறது. இதை திமுக தலைமை கண்டிக்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று வாகை சூடுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் இந்தியாவை உயர்த்த இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். உலக அரங்கிலே இந்தியா வல்லரசாக உழைத்துக் கொண்டு இருக்கிறார். பிரதமர் மோடியின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கின்றது. தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கேட்கும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
தமிழ்நாடு உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக விளங்க உதவிய மோடி தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாட்டிலுள்ள மாநகராட்சிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முன்வருகின்றனர்.
ஈரோடு மக்களின் பெரும் கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தையும் ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றியுள்ளது. காவிரி-கோதாவரி திட்டத்துககு பிரதமர் மோடி நிச்சயம் உதவுவார்” எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments