விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடிய தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்து மதத்தில் பிரதான தெய்வமாக மதிக்கப்படும் விநாயகப் பெருமானின் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த சதுர்த்தி தினத்தில் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி பின்பு, சிலைகளை ஆற்றில் கரைப்பது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் பேரிடர் கால சட்ட விதிமுறைகள் அமலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த விதிமுறைகளைக் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு பொது விழாக்களுக்கு தடைவிதித்து உள்ளது. எனவே தமிழக மக்கள் தங்களது வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாக்களை கொண்டாட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். மேலும் தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பில், விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் மிக எளிமையான முறையில் முதல் கடவுள் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தப் பூஜையில் அவரது மனைவி ராதா மற்றும் அவரது மகன் மிதுன் ஆகியோரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட தமிழக முதல்வர் தோப்புக் கரணங்களை போட்டு வழிபாடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout