இனி குறைகளை செல்போன் மூலமாகவும் சொல்லலாம்… முதல்வர் துவக்கி வைத்த அதிரடி திட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் மாவட்டம் தோறும் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதைத் தவிர மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்கும் வகையிலும் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் செல்போன் மூலமாக குறைகளை சொல்லும் சிறப்பு குறைத்தீர்ப்பு செயல் திட்டத்தை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து துவக்கி வைத்துள்ளார்.
பொதுமக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காணும் நோக்கில் துவங்கப் பட்டுள்ள இத்திட்டத்தின்படி இனி 1100 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் மட்டும் போதுமானது. இதன் மூலம் குறைகள் எதுவாக இருந்தாலும் பெறப்பட்டு மிக விரைந்து நிறைவேற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் நம்பிக்கை அளித்து உள்ளார். முதல்- அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டம் எனப் பெயரிடப்பட்டு உள்ள புதிய சிறப்பு திட்டத்தை தமிழக முதல்வர் இன்று பல அமைச்சர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்.
முன்னதாக சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வர் வெவ்வேறு அரசு துறைகள் தங்களுக்கென தனித்தனியே துறை வாரியான மக்கள் குறை தீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன எனச் சுட்டிக் காட்டினார். மேலும் மாவட்ட அளவில் திங்கள் கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கடைப்பிடிக்கப் படுகிறது.
அதோடு மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள், அம்மா திட்ட குறை தீர்க்கும் நாள், , ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள், மாநில அளிவில் முதல் அமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு பொது மக்களின் குறைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் கடிதமாகவோ, மனுவாகவோ மக்களிடம் இருந்து பெறப்படும் முறையில் அமைந்து இருக்கிறது.
இந்நிலையில் வளர்த்துவிட்ட காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய தொழில் நுட்பத்துடன் குறைதீர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் கூறி இருந்தார். அந்த வகையில் தற்போது 110 தொலைபேசி சேவை திட்டத்தை தமிழக மக்களின் பயன்பாட்டிற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments