இனி குறைகளை செல்போன் மூலமாகவும் சொல்லலாம்… முதல்வர் துவக்கி வைத்த அதிரடி திட்டம்!

தமிழகத்தில் மாவட்டம் தோறும் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதைத் தவிர மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்கும் வகையிலும் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் செல்போன் மூலமாக குறைகளை சொல்லும் சிறப்பு குறைத்தீர்ப்பு செயல் திட்டத்தை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து துவக்கி வைத்துள்ளார்.

பொதுமக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காணும் நோக்கில் துவங்கப் பட்டுள்ள இத்திட்டத்தின்படி இனி 1100 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் மட்டும் போதுமானது. இதன் மூலம் குறைகள் எதுவாக இருந்தாலும் பெறப்பட்டு மிக விரைந்து நிறைவேற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் நம்பிக்கை அளித்து உள்ளார். முதல்- அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டம் எனப் பெயரிடப்பட்டு உள்ள புதிய சிறப்பு திட்டத்தை தமிழக முதல்வர் இன்று பல அமைச்சர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்.

முன்னதாக சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வர் வெவ்வேறு அரசு துறைகள் தங்களுக்கென தனித்தனியே துறை வாரியான மக்கள் குறை தீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன எனச் சுட்டிக் காட்டினார். மேலும் மாவட்ட அளவில் திங்கள் கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கடைப்பிடிக்கப் படுகிறது.

அதோடு மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள், அம்மா திட்ட குறை தீர்க்கும் நாள், , ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள், மாநில அளிவில் முதல் அமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு பொது மக்களின் குறைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் கடிதமாகவோ, மனுவாகவோ மக்களிடம் இருந்து பெறப்படும் முறையில் அமைந்து இருக்கிறது.

இந்நிலையில் வளர்த்துவிட்ட காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய தொழில் நுட்பத்துடன் குறைதீர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் கூறி இருந்தார். அந்த வகையில் தற்போது 110 தொலைபேசி சேவை திட்டத்தை தமிழக மக்களின் பயன்பாட்டிற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… தொடரும் அவலம்!

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டு 19 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெடிவிபத்து சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

பைக்கில் சைலன்ஸர் வச்சி சவுண்டா? ஒட்டு மொத்தத்தையும் நொறுக்கிய வைரல் வீடியோ!

இரு சக்கர வாகனம் ஓட்டும் இளைஞர்கள் பலர் எக்ஸ்ட்ரா-சைலன்ஸர் வச்சி கூடுதல் சத்தத்துடன் வாகனம் ஓட்டி வருகின்றனர்.

இன்று சரியாக 12 மணிக்கு.... மேக்னாராஜின் இன்ஸ்டா பதிவு வைரல்!

ஆக்சன் கிங் அர்ஜுன் சகோதரரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சிரஞ்சீவி சார்ஜா மரணம் அடைந்தபோது

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட தமிழக விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு… காணொலி வாயிலாகத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்தியத் தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.