2021 க்கான புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- IndiaGlitz, [Tuesday,February 16 2021]
தமிழ்நாடு தொழில் கொள்ளை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். இதில் தமிழ்நாடு தொழில் கொக்கைகளை அமைச்சர் எம்.சி. சம்பத் பெற்றுக்கொள்ள சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான 2021 கொள்கை திட்டத்தை அமைச்சர் பெஞ்சமின் பெற்று கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் 28,053 கோடி ரூபாய் முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. மேலும் 10 புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிற் பேட்டைகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 3,489 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவர் துவக்கி வைத்தார்.
அதன்படி மொத்தமாக 46 திட்டப்பணிகள் இதன் மூலம் 33 ஆயிரத்து 465 கோடி ரூபாய் முதலீட்டுடன் 2 லட்சத்து 19 ஆயிரத்து 714 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் சிறப்பம்சமாக தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கு முதல் 4 ஆண்டுகள் சுலபமாக செயல்பட TNFAST என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என்றம் முதல்வர் தெரிவித்து உள்ளார்.