முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்… அடுத்த சட்டச்சபையும் அவருக்கே…

 

தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அடுத்த முறையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே ஆட்சியைப் பிடிப்பார் எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காரணம் கொரோனா நேரத்தில் தமிழகத்தை சிறப்பான முறையில் வழிநடத்தி சென்றார். மேலும் வீழ்ந்த பொருளாதாரத்தை தன்னுடைய திறமையான நடவடிக்கையால் சீர்ப்படுத்தினார்.

கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு தொற்று எண்ணிக்கையை கணிசமாக குறைத்தது. மேலும் கொரோனா நேரத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது. அதோடு மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து சிறப்பான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்வார் என்று கருத்துக் கணிப்புகள் கூறப்படுகின்றன.

சமீபத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. அதைச் செரிசெய்ய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீட்டு முறையில் 7.5% உள்இட ஒதுக்கீடு முறையை தமிழக முதல்வர் சாத்தியமாக்கினார். இதனால் 300 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிஜமானது.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆளும் அதிமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தக் குற்றச்சாட்டுகளில் அரசியல் ஆதாயத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை தமிழக முதல்வர் தொடர்ந்து தெளிவுப்படுத்தி வருகிறார். அதிமுக அரசு உடைந்து விடும், கட்சிக்குள் ஒற்றுமையில்லை எனப் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பினார்கள். ஆனால் அந்த வகையிலும் கட்சிக்குள் ஒற்றுமையே நிலவுகிறது என்பதை அதிமுக வெளியுலகிற்கு நிரூபித்து காட்டியிருக்கிறது. இதனால் அடுத்த முதல்வர் பதவியும் முதல்வர் பழனிச்சாமிக்கே என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்து இருக்கிறது.

More News

மன்மத ராசா.. லூசுப்பெண்ணே: காதல் ஜோடியை வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை கொண்டு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பக்கம் போட்டியாளர்களின் சண்டை சச்சரவு இருந்தபோதிலும்

குறும்படம்: ஆரியிடம் வசமாக சிக்கிய பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களை உசுப்பேத்தி தனது தந்திரத்தை பயன்படுத்தி கடந்த சில நாட்களாக பாலாஜி விளையாடி வருகிறார் என்பது கண்கூட தெரிகிறது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கில்

நீதிமன்றமா? கருத்துக்கணிப்பு மன்றமா? சுசித்ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்ற டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி சுசித்ரா, நீதிபதியா? அல்லது கருத்துக்கணிப்பு நடத்தும்

ஆரவ் திருமணம் குறித்து முதல்முறையாக மனம்திறந்த ஓவியா!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு சமீபத்தில் நடிகை ராஹே என்பவருடன் சிறப்பாக திருமணம் நடந்தது

பள்ளிகள் திறந்த 3 நாட்களில் 150 ஆசிரியர்களுக்கு கொரோனா: அண்டை மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி!

தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் 10ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.