திண்டுக்கல் லியோனியைத் தட்டி கேட்க திராணி இருக்கிறதா? தமிழக முதல்வர் காட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பட்டிமன்ற நடுவராகவும் இருந்து வரும் திண்டுக்கல் லியோனியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளார். முன்னதாக ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் வெளியிட்ட தமிழக முதல்வர், அவர் பொது மன்னிப்பு கோரியுள்ள நிலையில் தற்போது திண்டுக்கல் லியோனியின் பேச்சுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், “கோவையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அதுவும் தேர்தல் நேரத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்குகளை திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தட்டிக் கேட்காமல் இருந்து வருகிறார். அதற்கு அவரிடம் திராணியும் இல்லை“ எனக் காட்டம் தெரிவித்து உள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி என அனைத்துக் கட்சிகளும் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சாரங்களுக்கு இடையே சில விமர்சனங்களும் அதுகுறித்த விவாதங்களும் தற்போது தமிழக அரசியலில் களைக் கட்டி வருகிறது. இதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் நாகரிகத்தோடு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments