நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா? அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முதலில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சில வாக்குவாதங்களுக்கு பின் ஸ்ரீகாந்த் வாக்களிக்க அனுமதிக்கபட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீகாந்தும் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்து தான் வாக்களித்ததாக பேட்டி கொடுத்தார். ஆனால் சமீபத்தில் பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி, ஸ்ரீகாந்த் விரலில் தேர்தல் அதிகாரி மை மட்டும் வைத்ததாகவும், அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் இன்று இதுகுறித்து மீண்டும் பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது போல் வீடியோ உள்ளதால் அவர் வாக்களித்தாரா இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் இதுகுறித்து இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது