சதம் அடித்த பெட்ரோல்… மத்திய அரசின் வரிக் கொள்ளை என காங்கிரஸ் மூத்தத் தலைவர் காட்டம்!

தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது. இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இது மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை என காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை பெட்ரோல் விலை நீக்கிவிட்டது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும்போது ஏன் இந்த நிலை?

முந்தைய ஆட்சியில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 105 டாலர் இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65க்கு மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை. இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடம் இருந்து நாள்தோறும் அனுபவிக்கிறார்கள்“ என்று விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தற்போது ரூ.100ஐ தாண்டி இருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் விலை உயர்ந்து 99 ரூபாய் 19 காசுக்கு விற்பனையாகி வருகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 93 ரூபாய் 23 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

More News

12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவது இப்படித்தான்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கு இப்படித்தான் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். முதல்வர் அறிவித்துள்ள 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை

வரலாற்று முக்கியத்தும் கொண்ட ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பு!

அமெரிக்காவில் இனவெறி தாக்குதலில் சிக்கி உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது

தமிழகத்தில் 6- ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 5,755  நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு பதிலாக வெற்று ஊசியை செலுத்திய நர்ஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அவசரத்தில் செவிலியர் ஒருவர் வெற்று ஊசியை இளைஞர் ஒருவருக்கு செலுத்தி உள்ளார்.

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்… சுகாதாரத்துறை தகவல்!

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.