5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆணுறை வழங்கும் பள்ளிகள்! என்னதான் நடக்குது?
- IndiaGlitz, [Wednesday,July 14 2021]
அமெரிக்காவின் சிகாகோ மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளே ஆணுறைகளை வழங்கி வருகின்றன. இதைப் பார்த்து பெற்றோர்கள் என்னதான் சொல்லி கொடுக்க நினைக்கிறீங்க? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிகாகோ மாகாணத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு புது கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தியது. அந்தக் கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சம் 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறைகள் மற்றும் சானிடைசர் பேட்களை வழங்க வேண்டும் என்பது. அந்த அடிப்படையில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு இலவசமாக முகக்கவசம், சானிடைசர், ஆணுறைகள் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும் எச்.ஐ.வி விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் தேவையற்ற கர்ப்பதைத் தடுக்கவும் இதுபோன்ற கல்வி முறையை கொண்டு வந்ததாக சிகாகோ மாகாணம் அறிவித்து இருக்கிறது.
ஆனால் 10 வயதில் இருக்கும் சிறிய மாணவர்களுக்கு ஆணுறை வழங்கப்படுவதைப் பார்த்த பெற்றோர்கள் என்ன சொல்லி கொடுக்க விரும்புறீங்க? பாலியல் குறித்த கல்வி வரவேற்கத்தக்கதுதான்? அதற்காக ஆணுறைகளை பள்ளிகளே வழங்க வேண்டுமா? அதுவும் 5 ஆம் வகுப்பு முடித்த 10 வயது மாணவர்களுக்கு இதெல்லாம் தேவைதானா? எனச் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே ஆணுறை வழங்கும் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.