மார்பக அறுவை சிகிச்சைக்கு பின் பிரபல நடிகை சென்றது எங்கே தெரியுமா? வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,May 01 2022]

சமீபத்தில் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை ஒருவர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சென்ற இடம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி நடிகை சாவ்வி மிட்டல் சமீபத்தில் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பதும், அறுவை சிகிச்சைக்கு முன் அவர் மருத்துவமனையில் ஆடிய டான்ஸ் வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நடிகை சாவ்வி மிட்டல் சலூனுக்கு சென்று தனது தலைமுடியை வாஷ் செய்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டு அதில் சாவ்வி மிட்டல் கூறியிருப்பதாவது:

சின்ன சின்ன விஷயங்களில் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளது என்பதை பெரிய விஷயங்கள் நமக்கு புரிய வைக்கின்றன. அறுவை சிகிச்சைக்கு பின் சலூனுக்கு நடந்தே சென்று அங்கு அமர்ந்து தலைமுடியை வாஷ் செய்தேன். இது ஏதோ பெரிய சாதனை என நினைத்து பெருமைப்பட்டு கொண்டேன். மிகவும் வேதனையான வாழ்க்கையின் இடையே ஒரு புத்துணர்ச்சியை போல் எனக்கு இந்த சம்பவம் உணர்த்தியது. எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.