இந்த கைத்தட்டல் எதுக்கு? சிஎஸ்கேவை குழப்பும் வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Friday,February 19 2021] Sports News
2021 க்கான ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்தே பல வீரர்கள் நேற்றைய ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று சிஎஸ்கே ஒரு வீரரை ஏலம் எடுத்தப்போது ஏலத்தில் இருந்தவர்கள் அனைவரும் நக்கலான சிரிப்பில் ஆரம்பித்து, பின்னர் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நக்கல் சிரிப்பிற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதே தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிஎஸ்கே தொடர்ந்து மூத்த வீரர்களின் மீதே கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மொயின் அலியை 7 கோடிக்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே பின்னர் கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. இது சற்று அதிகமான தொகையாக இருந்தாலும் மிகச்சிறந்த தேர்வுகளாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஏலத்திற்கு வந்த புஜாரா பெயரை சிஎஸ்கே திடீரென தேர்வு செய்தது. இதைச் சற்றும் எதிர்பாராத பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி சிந்தா சிரித்தே விட்டார்.
இப்படி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்த ஏல உரிமையாளர்கள் பின்னர் கைத்தட்டி ஆரவாரம் செய்யவும் ஆரம்பித்தனர். இந்த கைத்தட்டலை ரசிகர்கள் முதலில் கிண்டலாகவே எடுத்துக் கொண்டனர். ஆனால் தற்போது இது கிண்டல் அல்ல, சிஎஸ்கே மூத்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தை கவுரவிக்கவே அந்த கைத்தட்டல் கொடுக்கப்பட்டது என்பதாகத் தகவல் கூறப்படுகிறது. டெஸ்ட் மேட்சில் கிங்காக கருதப்படும் புஜாராவை சிஎஸ்கே ஒப்பனிங் மாற்று வீரராக பயன்படுத்த இருக்கிறது. இவரின் வருகையால் விக்கெட்டை கட்டுப்படுத்த முடியும் என்ற கணிப்பும் இருந்து வருகிறது.
A round of applause ???? at the @Vivo_India #IPLAuction as @cheteshwar1 is SOLD to @ChennaiIPL. pic.twitter.com/EmdHxdqdTJ
— IndianPremierLeague (@IPL) February 18, 2021