புறக்கணிக்கப்பட்ட வீரரைத் தட்டித் தூக்கிய சிஎஸ்கே!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே மூத்த வீரர்களுக்கு மட்டுமே குறிவைத்து வருகிறது. முதலில் ஸ்பின் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு குறி வைத்த சிஎஸ்கே, கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மொயின் அலியை ஏலத்தில் எடுத்துள்ளது. அடுத்து இந்திய அணியின் சிறந்த வீரராக இருந்தாலும் கடந்த சில வருடமாக ஐபிஎல் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த புஜாராவை சிஎஸ்ஏ ஏலத்தில் எடுத்து இருக்கிறது. அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டாலும் பல வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் இவர் ஜொலிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணியில் இருந்து கேதர் ஜாதவ், வாட்சன், பியூஷ், சாவ்லா, முரளி விஜய், மோனு சிங், ஹர்பஜன் சிங் போன்றோர் விலக்கப்பட்டு உள்ள நிலையில் ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் 7 உள்நாட்டு வீரர்களை சிஎஸ்கே ஏலம் எடுக்க உள்ளது. இதில் மொயின் அலியை ரூ.7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே அடுத்து கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் புஜாராவையும் ஏலத்தில் எடுத்து உள்ளது.
ஒரு காலத்தில் சிறந்த வீரராக வலம் வந்த புஜாராவிற்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் சிஎஸ்கே அவரை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்து இருக்கிறது. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான இவரை சிஎஸ்கே எடுத்து இருப்பது அணிக்கு பக்க பலமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடம் நடைபெற்ற சையத் முஸ்டாக் கோப்பை போட்டியில் புஜாரா 66 பந்துகளுக்கு சதம் அடித்தார். இதை வியந்துபோன சிஎஸ்கே புஜாராவை ஏலத்து எடுத்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments