'ஆட்டோகிராப்' படத்தில் நடித்தவரா இவர்? இன்று எப்படி இருக்கிறார் பாருங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

சேரன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கிய திரைப்படம் ’ஆட்டோகிராப்’ என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சேரன் இந்த படம் பற்றி பெருமையாக குறிப்பிட்டு இருந்தார் என்பதும் இந்த படத்திற்கு பின்னர் தனக்கு பெரிய வெற்றிப்படம் எதுவும் இல்லை என்றும் அவர் மனம் திறந்து பேசினார் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தில் சேரனுடன் கோபிகா, சினேகா மற்றும் மல்லிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்து இருந்தார்கள் என்பதும் இந்த படம் சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகி மற்றும் சிறந்த என்டர்டைன்மென்ட் படம் ஆகிய தேசிய விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் மல்லிகாவின் கேரக்டரான கமலாவின் கணவராக ஒருவர் நடித்திருந்தார். அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதை சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: இவர் ஆட்டோகிராஃப் படத்தில் கமலாவின் கணவராக நடித்தவர். பெயர் அலெக்ஸ். திண்டுக்கல்லில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளையும் செய்து தருவது இவர்தான்.. எனக்கு நல்ல நண்பரும் கூட. காலம் எப்படி மாற்றியிருக்கிறது.. நல்ல உழைப்பாளி..இன்று நல்ல நிலையில் இருக்கிறார் என்பதை கண்டு சந்தோசமடைந்தேன்.

கமலாவின் கணவராக கிராமத்து மனிதர் போல் அந்த படத்தில் தோற்றமளித்த இவர் தற்போது நவ நாகரீக உடையில் சூப்பராக காட்சியளிப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றன. ஆட்டோகிராப் படத்தில் கிராமத்து நபராக நடித்தவரா இவர்? என கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

More News

ஆர்.கண்ணனின் 'தள்ளி போகாதே: சென்சார் தகவல்: 

'ஜெயம் கொண்டான்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கண்ணன் அதன்பின் 'கண்டேன் காதலை' 'சேட்டை' 'இவன் தந்திரன்' 'பூமராங்' உள்ளிட்ட திரைப்படங்களை

18-க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்...! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தமிழகத்தில் 18 வயதிற்கும் அதிகமானோருக்கு, கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க இருப்பதாக தமிழக அரசு சார்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் முழு ஊரடங்கு...! கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்...!

கர்நாடகாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தனியார் பேருந்துகளில் செல்வதற்கு ஆயிரக்கணக்கில் விலை அதிகரித்துள்ளது.

இந்தியா முழுக்க 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கா? சென்னை, கோவைக்கும் வாய்ப்பா?

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது பீதியை கிளப்பி வருகிறது.

ஓடிடியில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 திரைப்படங்கள்: பணிகள் மும்முரம்!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு 'உனரு' என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர்