ஐந்தில் ஒருவருக்கு தான்.. யாருக்கு அதிர்ஷ்டம்.. சேரனின் அடுத்த படைப்பின் டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் தரமான இயக்குனர்களில் ஒருவரான சேரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘சேரன்ஸ் ஜர்னி’. இந்த தொடர் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த தொடரின் டிரைலரை சேரன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த தொடரில் பிரசன்னா, ஆரி, திவ்யபாரதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர் மாரிமுத்து, வேல மூர்த்தி, அஞ்சு குரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜனவரி 12ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்த வெப் தொடரின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஐந்து நபர்கள் இன்டர்வியூவுக்கு செல்லும் நிலையில் அவர்களின் ஒருவரை அந்த கம்பெனி தேர்வு செய்யப் போகிறது. எதன் அடிப்படையில், எந்த தகுதியை வைத்து அந்த ஒருவரை தேர்வு செய்கிறார்கள், ஐவரில் யாருக்கு வேலை கிடைக்க போகிறது என்பது தான் இந்த வெப் தொடரின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது
வழக்கம் போல் சேரன் இந்த படத்தையும் தரமான ஒரு படைப்பாகவும் சமூக அக்கறையுடன் எடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hi friends its my OTT web series teaser. Watch now.
— Cheran (@directorcheran) December 30, 2023
Cheran's Journey Streaming on Jan 12th on @SonyLIV #SonyLIV #CheransJourney@directorcheran @eka_dop @CSathyaOfficial @realsarathkumar @prasanna_actor @Aariarujunan @divyabarti2801 @kalaiactor @YoursKashyap pic.twitter.com/ycHoNCmSo6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com