நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா: இயக்குனர் சேரன் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது என்பதும், பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வீடுகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அங்கு கட்டப்பட்டிருந்த உலகத் தரத்திலான சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஒன்றுக்குள் வெள்ள நீர் புகுந்து விட்டது. அந்த மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் படுத்திருந்த கட்டில் அளவிற்கு வெள்ள நீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலக தரத்தில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலேயே இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் இதுகுறித்து அங்கு சிகிச்சை பெற்று வரும் எந்தவித அதிருப்தியும் இல்லாமல் இருப்பது அந்த வீடியோவில் தெரிகிறது. இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இயக்குனர் சேரன் இது குறித்து ஆவேசமாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
எப்படிங்க இந்த மக்கள் இவ்வளவு சகிப்புத்தன்மையோட எதைப்பத்தியும் கவலை இல்லாம இருக்காங்கம்.. இவங்க மனசு முழுக்க நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா... என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவம் ஒன்று தமிழ்நாட்டில் நடந்தால் உடனே தெருவுக்கு வந்து நோயாளிகளும் உறவினர்களும் போராட்டம் நடத்தியிருப்பார்கள். ஆனால் பீகாரில் கட்டில் அளவுக்கு வெள்ளநீர் வந்தபோதிலும் பொறுமையாக இருப்பதை நினைத்தே சேரன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்
எப்படிங்க இந்த மக்கள் இவ்வளவு சகிப்புத்தன்மையோட எதைப்பத்தியும் கவலை இல்லாம இருக்காங்கம்.. இவங்க மனசு முழுக்க நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா... https://t.co/eQL4Yzd2bV
— Cheran (@directorcheran) July 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com