எனக்கு இதுவரை யாரும் சொன்னதே இல்லை! சேரன் காட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நடிகர், நடிகைகளின் பிறந்த நாளின்போது சங்கத்தின் சார்ப்பில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சமுத்திரக்கனி, பிளாக் பாண்டி மற்றும் நடிகை சரண்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள இயக்குனர் சேரன், "நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது பாராட்டத்தக்கது. ஆனால் நானும் ஆயுள்கால உறுப்பினர்தான். எனக்கு ஒரு வருஷம் கூட வாழ்த்து சொன்னதில்லை. இதில் கூட அரசியலா? நல்லா இருக்கட்டும் இந்த சங்கமும், கட்டிடமும்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'ராஜாவுக்கு செக்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout