இயக்குனர் சேரன் நடிக்கும் அடுத்த படம்: டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சேரன், அதன் பின்னர் ’பொற்காலம்’ ’வெற்றிக் கொடி கட்டு’ ’பாண்டவர் பூமி’ ’ஆட்டோகிராப்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவர் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சேரன் நடித்த ’ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேரன் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’தமிழ்குடிமகன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்கவிருக்கிறார் என்பதும் லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அனைவரின் அன்போடு இன்று இனிய துவக்கம்..
— Cheran (@directorcheran) December 15, 2021
" தமிழ்க்குடிமகன்"
இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு . இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் @rajeshyadavdop ஒளிப்பதிவில் @SamCSmusic இசையில் உருவாக இருக்கிறது. @PriyajoOfficial @onlynikil pic.twitter.com/lbdgK3LDjb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com